கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம்; உத்தரவிட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக தெரிவித்து மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் சட்டத்தரணியுமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோரை மகாராஷ்டிர காவல்துறையினர் நேற்றைதினம் கைது செய்திருந்தனர்.
இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று மாலை விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 5-ம் திகதிவரை வீட்டுக்காவலில் மட்டும் வைக்குமாறுஉத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் தொடர்புடைய விசாரணை அமைப்புகளை செப்டம்பர் 5-ம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுhறு கடிதம் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளனர்.