ஐ.நாவின் பலஸ்;தீனிய அகதிகள் முகாமைக்கான நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. பலஸ்;தீனிய அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகாமை சரிசெய்ய முடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் கவனமாக மறுஆய்வு செய்துள்ளதாகவும் இதற்கு மேலும் ஐ.நாவின் மீட்புப் பணி முகாமைக்கு நிதியுதவி அளிக்க முடியாதென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இவ்வாறு நிதி உதவி நிறுத்தப்பட்டமையானது பலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அபாஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தங்களது முகாமையின், பாடசாலைகள் , சுகாதார மையங்கள் மற்றும் அவசரகால உதவி திட்டங்கள் ஆகியவை சரிசெய்யமுடியாத அளவுக்கு தவறாக செயல்படுவதாக அமெரிக்கா தெரிவித்தமையை கடுமையாக மறுப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகாமையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகாமைக்கு மிகப்பெரிய நிதியுதவியை அளித்து வரும் தனி ஒரு நாடாக அமெரிக்கா உள்ளமை குறிப்பிடத்தக்கது.