சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்னவின் திருமணம் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்றமை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சில விதிமுறைகளுக்களுக்கேற்ப வெளியார் நிகழ்வுகளுக்கு அறவிடப்படுகின்ற கட்டணங்களுக்கு அமையவே குறித்த அரங்கு வழங்கப்பட்டதென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் திருமண நிகழ்வுக்கான அலங்காரங்கள், உணவு மற்றும் ஏனைய சேவைகளுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எந்த தொடர்புகளும் இல்லை எனவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது