Home இலங்கை “சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை”

“சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை”

by admin

சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமஸ்டி அரசியலமைப்பு எமக்கு தேவையில்லை. என நான் காலியில் பேசியதாக இன்றைய தினம பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து சில பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் அப்படி பேசியிருக்க மாட்டீர்களே  என விளக்கம் கேட்டார்கள். அவர்கள் எனது விளக்கத்துடன் இன்று செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனாலும் பல ஊடகங்கள் என்னை கேட்காமல் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். தமிழரசு கட்சியின் அடிப்படைக் கொள்கையே சமஸ்டியாகும்.

இந்நிலையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு தேவையில்லை. என நான் கூறிய தாக செய்திகளை வெளியிட்டிருக்கும் பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம்.

புதிய அரசியலமைப்பு குறித்து மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்கள் தெற்கில் இடம்பெற்று வருகின்றன. இதில் 7வது கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி மாவட்டத்தில் இடம்பெற்றது.

இது குறித்து தமிழ் மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  காரணம் தமிழ் ஊடகங்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த கூட்டங்கள் புதிய அரசியலமைப்பு இந்த நாட்டுக்கு எந்தளவு தூரம் அவசியமானது என்பதை மக்களிடம் தெளிவுபடுத்தி மக்களுடைய ஆதரவுடன் அதனை வெற்றி பெறச் செய்வதை நோக்கமாக கொண்டது.

இதனை பழைய இடதுசாரி கட்சிகள் சில முன்னெடுக்கின்றன. இதில் அரசியல் கட்சிகளாக தமிழ்தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் சில இடங்களில் ஐக்கியதேசிய கட்சியும் பங்களிக்கிறது.

இந்த கூட்டங்களில் பிரதமானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை பேசி வருகிறோம். மக்கள் விடுதலை முன்னணி 20வது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளபோதும்  தமது முன்னுரிமை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் எனவும் அது உருவாக்கப்பட்டால் 20வது திருத்தச்சட்டத்தை தாங்கள் கைவிடுவதாகவும் கூறியுள்ளது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தளவில் 20வது திருத்தச்சட்டத்தை நாம் ஆதரித்தாலும் எங்களுடைய கொள்கையின் படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்ப டவேண்டும். ஆனால் அது மட்டும் செய்தால் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை.

அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.  அதற்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். இதனை நாம் கூறுவதுடன் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் நிபுணர்களால் மாதிரி வரைபாக கூறியுள்ள விடயங்களையும் நாங்கள் கூறியே வருகிறோம். அதிலும் சமஸ்டி என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.

அதேபோல் ஒற்றையாட்சி என்ற சொல்லும் இடம்பெற்றிருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை தமிழ் பிரதேசங்களில் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நான் கூறிவந்திருக்கிறேன். புதிய அரசியலமைப்பில் சமஸ்டிக்கான 2 குணாம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அது மாதிரி வரைபிலும் உள்ளது. ஆனால் சமஸ்டி என்ற பெயர்பலகை அல்லது சொல்லாடல் இருக்க கூடாது என்பதுடன், புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பாகவும் இருக்ககூடாது. இது எங்களுடைய நிலைப்பாடு.

வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம்,  மற்றும் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் வந்த சந்திரிக்கா அம்மையாருடைய தீர்வு திட்டம் உள்ளிட்டவற்றிலும் சமஸ்டி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை. அதேபோல் ஒற்றையாட்சி பெயர்பலகை அல்லது சொல்லாடல் இல்லை.

ஆகவே அந்தமாதிரியான ஒரு ஒழுங்குமுறை ஊடாகவே நாங்கள் நகர்ந்து கொண்டிருக் கிறோம். புதிய அரசியலமைப்பு சம்மந்தமான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது 2015.01.19ம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றுகையில்,  சமஷ்டி என்றால் தெற்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஒற்றையாட்சி என்றால் வடக்கில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் அர சியலமைப்பு மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படகூடாது. அவ்வாறான ஆவணமாக அது இருக்ககூடாது.  எனவே நவீன அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அந்த கருத்து இடைக்கால வரைபில் அப்படியே கூறப்பட்டுள்ளது. ஆகவே பெயர்பலகையில் அல்லது சொற்களில் தங்கியிருந்து குழப்பங்களை விளைவிக்காமல், புதிய அரசியலமைப்பு முயற்சிகளை தோற்கடிக்காமல் இருக்க. நாம் பெயர்பலகை அல்லது சொல்லாடலை தவிர்த்து உள்ளடக்கத்தில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை நான் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கும் தெளிவாக கூறிவருகிறேன். இரத்தினபுரி பகுதியில் உரையாற்றும் போது இந்த நாடு ஒரு நாடாக இருக்கவேண்டுமானால் புதிய அரசியலமைப்பு தேவை. இது வரை தமிழ் மக்கள் ஒரு நாட்டுக்குள் இணக்கமாக வாழ்வதற்கான இணக்கப்பாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. ஆகவே இந்த சமூக ஒப்பந்தம் அவசிய மானது.

இந்த ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழ்வதற்கான இணைக்கப்பாட்டை நாங்கள் தெரிவிப்பதற்கான நிபந்தனையாக அர்தமுள்ள அதிகார பகிர்வு இடம்பெறவேண்டும். என கூறினேன். அதேபோல் காலியில் நடைபெற்ற கூட்டத்திலும் சமஸ்டி குறித்து பல விடயங்களை கூறியிருந்தேன். கூட்டத்தின் நிறைவில் என்னுடைய உரையை அடிப்படையாக கொண்டு என்னை நோக்கி விசேடமான கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அந்த கேள்வி சமஸ்டியை மட்டும்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?  என அமைந்திருந்தது. அப்போதும் நான் வழக்கமாக கூறுவதைபோல் சமஸ்டி பெயர்பலகை அல்லது. சொல்லாடல் எமக்கு தேவையில்லை. என்றே கூறினேன்.

அதனை சமஸ்டி தேவையில்லை. என நான் கூறியதாக ஊடகங்கள் தலைப்பு செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. புதிய அரசியலமைப்பில் சமஸ்டிக்கான குணாம்சங்கள் உண்டு நான் சமஸ்டி தேவையில்லை. என எப்போதும் கூறவில்லை என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More