சீனா வழங்கும் கடன்களுக்கு ஆபிரிக்க நாடுகள் சம்மதம் தெரிவித்து வரும் நிலையில், சீனா வழங்கும் கடன்களால் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். உகாண்டாவின் தலைநகரையும் இண்டெப் தர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் நான்கு வழிச்சாலை பணியை 476 மில்லியன் டொலர் பெறுமதியில் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளநிலையில் அதற்கு சீன வங்கியொன்று கடன் வழங்கியுள்ளது.
இந்த 51 கி.மீ நீளமான வீதியினால் பயணநேரம் இரண்டு மணித்தியாலம் வரை குறையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடன் பெற்று மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு பணிகளால் ஆபிரிக்க பொருளாதாரம் சிதைவடையும் எனவும் இந்தத் திட்டமானது சீனா இலாபமடைய ட்டுமே வழவகுக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இந்த பகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் உடைய 40 சதவீதமான நாடுகள் கடனில் சிக்கி உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது