217
இஸ்ரேலில் பொது இடங்களில் புகைப்பிடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. முன்பே அந்த நாட்டில் பொது இடங்களில் புகைப்பதற்கு எதிரான சட்டம் இருந்தாலும், தற்போது அவை எந்தெந்த இடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அரச அலுவலகங்கள், நீதிமன்றம், மத சபை, மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களிலும் 50 பேருக்கு மேல் கூடும் இடங்களிலும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனை மீறி குறித்த இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு 1385 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love