Home உலகம்சவூதியில் இணையவழி நையாண்டி செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை – 30 லட்சம் ரியால்கள் அபராதம்

சவூதியில் இணையவழி நையாண்டி செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை – 30 லட்சம் ரியால்கள் அபராதம்

by admin

பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் புதிய மன்னராக முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் சமூகவலைத்தளங்களில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் கடும் தண்டனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணையதளங்கள் வழியாக கேலி, கிண்டல் மற்றும் விமர்சனங்கள் என்னும் போர்வையில் நையாண்டித்தனமான தகவல்களை பரப்பும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 லட்சம் ரியால்கள் அபராதமாக விதிக்கப்படும் என அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More