ரபேல் போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. பிரான்ஸின் பிரபல ‘தசால்த்’ நிறுவனத்திடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்திவருகின்றது.
இந்த நிலையில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானத்தினை இந்திய அரசு வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் எனக் கோரி சட்டத்தரண்யான எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளதெனவும் இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதனால் இந்த விமானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று பரிசீலனைக்கு வந்தநிலையில் இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்கும் விதமாக பட்டியலிட்டுள்ளனர்.