Home இந்தியாதுபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் பெறுமதியான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் பெறுமதியான தங்கம் பறிமுதல்

by admin


துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது சென்னையைச் சேர்ந்த ஒருவரது உடமைகளில் இருந்து இந்த தங்கம் மீடகப்பட்டுள்ளது.

அவரது பயணப் பொதியிலிருந்த மின்சார வயரை சோதித்த போது அதில் செம்பு கம்பிகளுக்கு பதிலாக தங்க கம்பிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்தமை தெரிய வந்துள்ளது. அதேவேளை துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த ஒருவரிடம் இருந்தும் 9 லட்சம் ரூபா பெறுமதியுள்ள 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த இருவரிடமும் மும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More