Home உலகம் எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை

by admin


எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் உள்ள ரப்பா அடாவியா சதுக்கத்தில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டதனால் அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் அந்நாட்டு ஜனாதிபதி   அப்டெல் பட்டா சிசியின் ஆட்சிக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் சுமார் 700 பேர் மீதான வழக்கு விசாரணையில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலர் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த சிரேஸ்ட தலைவர்கள் உட்பட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar September 8, 2018 - 8:20 pm

Ok good bye buddies. May God bless your all good soul rest in peace. Allah is great.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More