ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா பகுதியில் அரச அனுமதி இன்றி இயங்கி வந்த சட்டவிரோதமாக இயங்கி வந்த காப்பகத்தில் இருந்து 19 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த இந்த சிறுவர் சிறுவர்கள் காப்பகத்தில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் 19 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த காப்பகத்தில் 21 குழந்தைகள் இருந்துவந்ததாகவும், அதில் 2 பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
8 சிறுமிகள் உட்பட 19 பேரை மீட்ட காவல்துறையினர் அந்த காப்பகத்தின் உரிமையாளரான அன்ரனி தோமஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன் அவரை சிறையிலும் அடைத்துள்ளனர்