Home இலங்கைநவாலியில் நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

நவாலியில் நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி , அவற்றுக்கு தீ வைத்ததுடன் , ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இலக்க தகடுகள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பலே வன்முறையில் ஈடுபட்டு உள்ளது.

குறித்த வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , துரித விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , நேற்று சனிக்கிழமை இரவு சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்களை துரிதப்படுத்தி உள்ளதாகவும் , காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More