அமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்’ளது. ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களை கொடுமை செய்தமை தொடர்பாக அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் யோசனை செய்து வரும் நிலையிலேயே அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நீதிமன்றம் சட்டவிரோதமானது எனவும் என்றும் தமது நாட்டு மக்களை பாதுகாக்க எதுவேண்டுமானலும் செய்வோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ( John Bolton ) தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் போது எந்த ஒரு அமெரிக்க ராணுவத்தினரும் உளவுத்துறை அதிகாரிகளும் விசாரிக்கப்படுவர் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையாளரான பற்றூ பென்சூடா (Fatou Bensouda) வின் கோரிக்கை தெரிவித்திருந்தார். எனினும் ஆப்கானிஸ்தானோ, எந்த ஒரு அரசாங்கமோ இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என போல்டன் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையாமல் இருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது