பிரான்ஸ் கால்பந்து அணி ஹியூகோ லோரிஸ்(Hugo Lloris ) க்கு 20 மாதம் கார் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 50 ஆயிரம் பவுண்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் டொட்டன்ஹாம் ஹட்ஸ்பர் அணிக்காக விளையாடி வரும் இவர் லண்டனில் வைத்து மதுபோதையில் கார் ஓடியமைக்காகவே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மது போதையில் கார் ஓடிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட இவர் 7 மணித்தியாலங்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நடைபெற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டதிற்கு இரண்டு மடங்கு அதிகளவு மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து கார் ஓட்டுவதற்கு 20 மாதம் தடைவிதித்ததுடன், 50 ஆயிரம் பவுண்ஸ்சும் அபராதம் விதிக்கப்பட்டது.
லோரிஸ் தலைமையிலதான் ரஸ்யாயாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் கிண்ணத்தினைக் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது