சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற குற்றவாளியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்றையதினம் அந்நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் காரினை வேகமாக செலுத்தி மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
ஆதனை தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 46 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்த காவற்துறையினர் அந்த நபரை சுறற வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் தாக்குதலாளி; 54 வயதுடைய யாங் ஜான்யுன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி எனத் தெரியவந்துள்ளதனைத் தொடர்ந்து, அவரிடம் காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.