Home இந்தியாபஞ்சாப்பின் ஜலந்தர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…

பஞ்சாப்பின் ஜலந்தர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…

by admin

பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் காவல் நிலையத்தில் நேற்றையதினம் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் மக்சுடான் காவல் நிலையத்தை குறிவைத்து, சுமார் மாலை 5 மணியளவில் சிலர் மேற்கொண்ட இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More