Home இந்தியாஇஸ்ரோவின் P.S.L.V.C-42 ஏவுகணை விண்ணில் ஏவப்படுகிறது…

இஸ்ரோவின் P.S.L.V.C-42 ஏவுகணை விண்ணில் ஏவப்படுகிறது…

by admin

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணைக்கான 33 மணி நேர ‘கணிப்பீடு’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (16.09.18) இரவு அது விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள த்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ஏவுகணைகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணை இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் பிரித்தானியாவுக்குச் சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய

நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

இதற்காக 3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணையில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணை 230.4 டன் எடை கொண்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும். என இஸ்ரோவின் சிரேஸ்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More