178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒரு கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் வைத்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளுடன் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை தல்தூவ பாலத்திற்கு அருகாமையில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர்களுடன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 20 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. 25 மற்றும் 34 வயதானவர்கள் இவ்வாறு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Spread the love