குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்பக்கூடுகள் அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வூசெய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளப் படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும அதே போன்று கை கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம்?என சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய மூன்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் அகழ்வு பணிகளின்போதும் மேலும் மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என தெரிகின்றது . எனவே அகழ்வு பணிகளை விரைவு படுத்தும் வகையில் இன்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
1 comment
My goodness what is this. Is this a archeological excavation????? In fact every one knows our motherland Sri Lanka went over a prolonged bloody civil war 30 Yrs. There those huge mass human massacres were taken place irrespective all waring faction including Sri Lankan forces to all militant faction who ever engaged in all those atrocities. Like a Gun culture. There is these exhumation whom those fingers to be pointed out????? in fact however the favour would be in terms of lye over benefit of doubt under legal pleadings. In fact these exhumation however should prove those who ever involved beyond the benefit of doubt. Though the suspicion may fall even those Indian forces IPKF as well they who were engaged war in our mother land for under peacekeeping mission wage war over waring faction LTTE. There so many controversies and complications are there in this probe. It’s one way leads to a futile attempt rather our state country as a whole would focus into development aspects in terms of countries development path by equitable manner in favour those who ever diversified communities lives in our mother land Sri Lanka. May God bless mother Sri lanka. This is my humble view by gone by gone.