தொழில்நுட்ப வல்லுனரும் செல்வந்தருமான எலன் மஸ்க் மீது தாய்லாந்தில் தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றிய பிரித்தானியாவினைச் சேர்ந்த முக்குளிப்பாளரான வெர்னன் உன்வர்த் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரித்தானியாவினைச் சேர்ந்த முக்குளிப்பாளர் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தார் எலன் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறி வருவதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறார்களை மீட்பதற்கு வெர்னன் உன்வர்த் உதவியிருந்த நிலையில் அவர் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தார் என எலன் மஸ்க் சான்றுகள் இல்லாமல் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
எலன் மஸ்க் இவ்வாறு அவதூறாக பேசுவதை தடுக்க வேண்டும் எனவும் இதற்காக அவர் தனக்கு இழப்பீடாக 75 ஆயிரம் டொலரகள் வழங்க வேண்டும் எனவும் கோரி வெர்னன் உன்வர்த் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.