ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமுலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஒக்டோபர் 8ம் திகதிவரை வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அமுலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்து உள்ளது.இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் சார்பில் நேறறு; உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கார்த்தி சிதம்பரம் அமுலாக்கப்பிரிவின் விசாரணைக்கு முழுஅளவில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ங போதும் டெல்லி உய்ர்நீதிமன்றம் அவருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரி, அமுலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே அவரை கைது செய்வது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படும் அமுலாக்கப்பிரிவின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது