Home உலகம் உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை உயிரிழக்கின்றது

உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை உயிரிழக்கின்றது

by admin


உலகில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள் சீர்செய்யக்ககூடிய சாதாரண காரணங்களினால் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1990களுக்குப் பின்னர் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வந்த போதிலும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்வதாகவும் இன அடிப்படையில் குழந்தைகள் இறப்பு அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆசிய கண்டத்தில் இறக்கும் மூன்றில் ஒரு குழந்தை ஆபிரிக்காவிலேயே ; இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2018-ல் இருந்து 2030-க்குள் 5 வயதுக்கும் குறைவான 56 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.மிகச்சாதாரண வழிமுறைகளான நல்ல உணவு, குடிநீர் மருத்துவம் போன்றவற்றால் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் குணப்படுத்தக்கூடிய மலேரியா போன்ற நோய்களாலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் அதிகம் உயிரிழப்பதாகவும் 5 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விபத்துக்களினாலும், நீரில் மூழ்குவதாலும் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிக அளவிலான நாடுகளில் கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவு அற்ற பெற்றோர்களினால் தங்கள் குழந்தைகளை முறையாக பேண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More