179
இன்று நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்த்தினை தெரிவு செய்த நிலையில் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து, 163 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது
Spread the love