காவற்துறை மா அதிபரை அந்தப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமாயின் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். காவற்துறை மா அதிபர் விஷேடமான நபர் என்றும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பின் அது தொடர்பில் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஒருபோதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன் ஒருவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவர் கூறினார். சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மாத்திரம் போதுமானதல்ல என்றும் அது நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.