அரச நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றவர்களில் அதிகளவானவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் இந்தப் பரீட்சையை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிமல் ரத்நாயக்க, சுமந்திரன் ஆகியோர் பாரளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடங்களின் பின்னர் பரீட்சை மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்துச் செய்வது நியாயமற்றது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஏற்றுக்கொண்டதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தி – பரீட்சையை இரத்துச் செய்ய முயற்சி….
187
Spread the love
previous post