Home இந்தியாகன்னியாஸ்திரி மீதான பாலியல் குற்றச்சாட்டு – பிராங்கோ முல்லக்கல் கைது

கன்னியாஸ்திரி மீதான பாலியல் குற்றச்சாட்டு – பிராங்கோ முல்லக்கல் கைது

by admin


கன்னியாஸ்திரி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிராங்கோ முல்லக்கலை இன்று கொச்சியில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.  கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்த முறைப்பாடு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியதியிருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக பிராங்கோ முல்லக்கல் நேரில் முன்னிலையானார். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

இதேவேளை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வத்திகான் சபை நேற்று அறிவித்திருந்தது.  இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம் விசாரணை நடத்திய காவற்துறையினர் விசாரணை முடிவில் அவரை கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More