623
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் கிறிஸ்தவ பாரம்பரிய கலைகளில் ஒன்றான புனித சூசையப்பர் வாசப்பு நாட்டுக்கூத்து நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு 7.30 மணியளவில் அச்சங்குளம் கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் , சிறப்பு விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக நுண் கலைப்பீட பேராசிரியர் எஸ்.சந்திரகுமார் , வட மாகாணசபை உறுப்பினர் பிரிமுஸ் சிராய்வா , பங்குத்தந்தையர்கள் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் எல பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலைஞர்களும் கிராமத்தின் பெரியவர்களும் விழாக்குழுவால் மதிப்பளிக்கப்பட்டனர்.
விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள் மட்டக்களப்பிற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் கலைகளினூடாக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கலைப்பீட மாணவர்கள் அதிகமாக மன்னார் மாவட்டத்தில் உருவாக்கம் பெற்ற பாரம்பரிய கலைக்கூத்துக்களை ஆராய்ந்து கற்பதில் பெரும் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த வாசகப்பு நாட்டுக் கூத்தானது சுமார் 40 வருடங்களின் பின் அச்சங்குளம் கிராமத்ததுக் கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Spread the love