இந்திய மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை வாட்ஸ்அப் நிறுவனம் நியமனம் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் முகப்புத்தகம் வட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் அண்மைக்காலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றதனால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் அவை காரணமாகி விடுகின்றன.
இதனால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என வட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரியிடம் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது கோரிக்கையை முன் வைத்ததுடன் இந்தியாவுக்கென மையம் அமைத்து வட்ஸ்அப் நிறுவனம் செயல்படவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்திய கோரிக்கையை ஏற்று கோமல் லகிரி என்பரை இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிரி என்பரை இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.