மாலைதீவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம், மாலைதீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட நிலையில்
அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகின்ற முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்டார்.நேற்றையதினம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் 92 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றில் வழக்கு தொடரலாம் எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது