ஊழல் ஒழிப்பு பிரிவின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவினை எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஸவையும படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த, பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா தெரிவித்திருந்தாரென ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது நாமல் குமார தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இதன்போது முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் ஒலிப்பதிவு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அந்த ஒலிப்பதிவு அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் குறித்த ஒலிப்பதிவு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காகவே நாமல் குமாரவை புதன்கிமை அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஒலிப்பதிவு தொடர்பிலான விசாரணைகளின் அறிக்கைகள் எதிர்வரும் வாரத்திற்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் எனகவும் அதன் பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது