ஸ்பெயினில் நடைபெற்ற உலக முதியோருக்கான ஓட்டப் பந்தயத்தில் சம்பியன் பட்டத்தினையும் , ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தினையும் இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டியான மான் கவுர் வென்றுள்ளார்.
ஸ்பெயினின் மலாக்காவில் நடைபெற்ற 100 வயது முதல் 104 வயதுடையவர்கள் பங்கேற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சம்பியன் போட்டியில் 200 மீற்றர்; ஓட்டத்தில் முதலிடம் பெற்று சம்பியன் பட்டம் வென்ற மான்கவுர் ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளர் இதனைத் தொடர்ந்து அவர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிக்கு தற்போது தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை ரொட்டிதான் தனது உணவு எனவும் நன்றாகச் சாப்பிடுவதும், அதற்கு தகுந்தார்போல் உடற்பயிற்சி மேற்கொள்வதும் தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என மான்கவுர் தெரிவித்துள்ளார்.தன்னுடைய மகன் குருதேவ் சிங்தான் நான் ஓட்டப்போட்டியில் பங்கேற்க காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெண்களுக்கான பிங்கத்தான் ஓட்டப்போட்டிக்கு தூதுவராக மான் கவுர் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது