உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஸ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசபடைகளுக்கு ஆதரவு அளித்து வருகின்ற ரஸ்யா கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் விமான தாக்குதலும் நடத்தி வருகின்ற அதேவேளை இஸ்ரேலும் ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை நேற்று தொடர்புகொண்ட ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் சிரியாவிற்கு எஸ்-300 ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளதாவும் சிரியாவில் உள்ள ரஸ்ய ரணுவ வீரர்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் ரஸ்யாவின் இந்த முடிவு இஸ்ரேல் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஸ்யா முயன்ற போது, இந்த ஏவுகணைகளை தங்கள் நாட்டிற்கு எதிராக சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் அந்த முடிவை ரஸ்யா கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.