சீனாவை சேர்ந்த ஒருவர் உளவு பார்த்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 27 வயதான ஜு ஷக்குவான் (Ji Chaoqun) என்பவர் சட்ட விரோத உளவாளியாக செயல்பட்டதாகவும் அவரை சிக்காகோ நகரில் வைத்து கைது செய்ததாகவும் அமெரிக்க சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மின் பொறியியல் படிப்பதற்காக 2013ஆம் ஆண்டு அமெரிக்கா வந்துள்ள ஷக்குவான் பின் சிகாகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்வதற்காக தனது பெயரை இணைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோ நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக பதியப்பட்ட குற்றவியல் முறைப்பாட்டில் அவர் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு பணி புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை அவர் குறி வைத்ததாகவும் . அவர் குறிவைத்த சிலர் பாதுகாப்புத் துறைக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் இருப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.