ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவப்வாயக்கிழமை நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் மாவனல்லை வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை, இந்தத் தகவலை தெரிவித்துள்ளாரான, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த போது, இந்த விடயம் தெரியவந்துள்ளதெனக் குறிப்பிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றையும், மன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், நாமல் குமாரவின் வீட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை, விசா இன்றி நாட்டில் தங்கியிருந்துள்ளார் எனவும் அவர் கொழும்பு, றாகம பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.