இங்கிலாந்துக்கெதிராக இலங்கை ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில் இலங்கை அணியில் இடம்பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்தவகையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சுரங்க லக்மால், குசல் மென்டிஸ், ஷெகான் ஜெயசூரிய, டில்ருவான் பெரேரா ஆகியோர் இடம்பெறவில்லை.
அவர்களுக்கு பதிலாக சதீர சமரவிக்கிரம, லக்ஷன் சந்தகான், நுவான் பிரதீப் உள்ளிட்டோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமாலே அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் வரை தலைவராக இருப்பார் என தலைமைத் தேர்வாளர் கிரேமி லப்ரோய் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகக் கிண்ணத்துக்கான தமது திட்டங்களில் அஞ்சலோ மத்தியூஸ் இன்னும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.