திருமணத்தை மீறிய தவறான உறவில் ஆண் மட்டுமே குற்றவாளியாக எடுத்துக்கொள்ளப்படும் சட்டப்பிரிவு 497-ஐ நீக்க வேண்டும் என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது திருமணமான பெண்ணுடன் அவரது கணவரின் சம்மதமின்றி வேறு ஒரு திருமணமான ஆண் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால், சட்டத்தில் ஆண் மட்டுமே தண்டனைக்குரியவர் எனவும் அந்த பெண்ணுக்கு தண்டனை இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 497 மற்றும் தொடர்புடைய குற்ற சட்டப்பிரிவு 198 (2) ஆகியவை இதனை வலியுறுத்துகிறது.
ஒரு குற்றத்தில் தொடர்புடைய ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, அநீதியானது, சட்டவிரோதமானது, ஒருதலைப்பட்சமானது, அடிப்படை உரிமைகளை மீறுவது, பாலின சமநிலைக்கு மாறானது. எனவே இந்த சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் அல்லது பொதுவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. . இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.