Home இலங்கைரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் காவற்துறையினருக்கு பங்குள்ளது….

ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் காவற்துறையினருக்கு பங்குள்ளது….

by admin

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஆகியோரின் கொலைகள் தொடர்பில் காவற்துறையினருக்கு பங்குள்ளது. அதுபோன்ற சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளது என கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக்க த சில்வாவின் சூழச்சியானது குறித்த ஒரு காலப்பகுதிக்கு முன்னிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு வேலைத்திட்டமாகும். முன்னாள் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் அநுர சேனநாயக்க செயற்திறன்மிக்க ஒரு அதிகாரியாவார். அவரை ஒரு வருட காலம் சிறையில் அடைத்துள்ள போதும் எனினும் அவருக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் லலித் அதுலத் முதலியை காவற்துறையினரின் பங்குபற்றலுடன் அப்போதிருந்த அரசியல்வாதிகள் சிலரே கொலைசெய்ததாக நாம் நம்புகிறோம்.

இதனை அறிந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, மேதின கூட்டத்தில் அந்த தகவலை வெளியிட இருந்தார். அவ்வாறு வெளியிட்டிருந்தால் அன்று காவற்துறையினரில் அரைவாசிப்பேர் சிறை செல்ல வேண்டியிருந்திருக்கும். எனினும் அதனை வெளியிடுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவையும் கொலை செய்தனர். இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் காவற்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனத்தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More