வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக புனர்வாழ்வு பெற்று வந்த மூவர் இன்று காலை சமூகத்துடன் இணைத்துவைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் எதிரிசங்காவின் தலைமையில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனையகத்தினால் கடந்த பல வருடங்களாக சிறையிலிருந்து புனர்வாழ் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒருவருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்துகொண்ட ஜீ. புஸ்பராஜ் தலவாக்கலை, கமலநாதன் திருகோணமலை, புருஷோத்மன் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று பேரும் இன்று சமூகத்துடன் அவர்களது உறவினர்களிடம் இணைத்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பணிப்பாளர் வன்னி கேணல் அசேல ஒபேசேகர, வன்னி மீள் பரிசோதனை அதிகாரி கேணல் ஏமன் பெர்ணன்டோ, மும்மத சமயத்தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், தொழிற்பயிற்சி அதிகாரிகள், காவற்துறையினர், பொதுமக்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்று சமூகமயமாக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.