Home இந்தியாரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிகாரிக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதா? –

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிகாரிக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதா? –

by admin


ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ஆட்சேபனை தெரிவித்த அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவது குறித்து மோடி அரசு பிரான்ஸ்சுடன் ஏற்படுத்திக்கொண்ட ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.  அந்தக் குற்றச்சாட்டு வலுசேர்க்கும் வகையில், பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி ஹோலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை இணைத்தது இந்திய அரசின் வற்புறுத்தலினாலேயே என தெரிவித்ததாக வெளியான செய்தி அமைந்தது.  அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தனது ருவிட்டர் பக்கத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஒரு மாத விடுமுறை அளித்துவிட்டு, ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரமாக ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தியை குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசை எதிர்ப்பவர்கள் குறிவைத்து நீக்கப்படுவதும், ஆதரிப்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துவிக்கையில், பேச்சுவார்த்தை நடத்தும்போது, அதில் ஈடுபடும் அதிகாரிகளிடையே கருத்து மாறுபாடுகள் எழுவது இயற்கையே. சம்பந்தப்பட்ட அதிகாரியின் மாறுபட்ட கருத்து, பதிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்பின், கூட்டு முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி குறிப்பில் அந்த அதிகாரியும் கையெழுத்து இட்டுள்ளார். அதை ஏற்றே, அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அதிருப்தி தெரிவித்த அதிகாரி ராஜீவ் வர்மா, விடுமுறையில் அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. அது தவறான தகவல். அவர் முன்கூட்டியே திட்டமிட்டபடி, வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றுள்ளார் என என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More