Home உலகம்சீனாவில் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by admin


தமது நாட்டில் எச்.ஐ.வி நோய்த் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சீனா கூறியுள்ளது. சீனாவில் எச்.ஐ.வி – எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரம் எனவும் 2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 40,000 பேருக்கு புதிதாக எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது எனவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நோய்த் தொற்று உள்ள ரத்தத்தை முறையாகப் பரிசோதனை செய்யாமல் உடலில் செலுத்தப்படுவதால் எய்ட்ஸ் பரவுவது அதிகமாக இருந்த போதும் தற்போது பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளே .முக்கியக் காரணம் என்று தெரிவிக்கட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக சீனாவில் எய்ட்ஸ் நோயுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் சதவீதம் அதிகரித்து வருகிறது எனவும் அந்நாட்டில் ஒருபாலுறவினர் மற்றும் பிற பாலின சிறுபான்மையினர் ஆகியோருக்கு பாலுறவு மூலம் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுவது முக்கியப் பிரச்சனையாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விரைவில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சீன அரசு உறுதியளித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More