Home இலங்கைஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு சாதகமானது – ஜாதிக ஹெல உறுமய

ஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு சாதகமானது – ஜாதிக ஹெல உறுமய

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு சாதகமானது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட பெண் அரசியல்வாதிகள் பலரும் உலக அரசியலிலிருந்து விலகிச் செல்வதாகவும் இதனால் இலங்கைக்கு நல்ல நேரம் பிறந்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்துடன் இலங்கைக்கு இருந்த மற்றுமொரு அரசியல் தலைவலி நீங்கியது எனவும் ஜெயலலிதாவின் மரணத்தையிட்டு ஜாதிக ஹெல உறுமய மெய்யாக மகிழ்ச்சி அடைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஹிலரின் கிளின்ரன், சமந்தா பாவார் மற்றும் நிசா பிஸ்வால் போன்றவர்களும் ஒரம் கட்டப்படுவர் எனவும் அது இலங்கைக்கு சாதகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More