காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பெப்ரவரி 5ம் திகதி வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு டிசம்பர் 15ம் திகதி வரை கர்நாடகம் 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் என்றும் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் காவிரி வழக்குகள் மீது டிசம்பர் 15ம் திகதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.