Home இலங்கையாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் சிறுவர் தின வைபவம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் சிறுவர் தின வைபவம்

by admin
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின வைபவம் 01.10.2018 (திங்கட்கிழமை) அன்று கல்லூரி சபாலிங்கம் அரங்கத்தில் இடம்பெற்றது.
” தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக எமது சிறுவர்களை பலப்படுத்துவோம்” எனும் இவ்வருடத்திற்கான தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வானது கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வினை கல்லூரி குழு சாரண பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் நிகழ்வுகளினை நெறிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வில் இ.கிருசாந்தன் அவர்களின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பேச்சு இடம்பெற்றதை தொடர்ந்து க.சுவாமிநாதன் ஆசிரியர் சிறுவர் தினம் கொண்டாடப்படவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து ஆலோசனை வழிகாட்டல் பொறுப்பாசிரியர் கு.மகிழ்ச்சிகரன் உளசெயற்பாடு தொடர்பான நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தார். அதனை தொடர்ந்து சாரணர்களினால் சிறுவர்தினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள் என்பன இடம்பெற்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More