ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் கட்டலோனியா பகுதியில் அந்நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிப்பதுடன் மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கினை மேற்கொள்கின்ற நிலையில் கட்டலோனியாவை தனி நாடாக பிரித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. மேலும் தனிநாட்டு கோரிக்கை தொடர்பாக வாக்களிப்பு இடம்பெற்று வெற்றயீட்டிய போதிலும் அது செல்லாது என அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தநிலையில் அந்த பொதுவாக்கெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பார்சிலோனா உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் பெருமளவில் திரண்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் காவல்துறையினர் போராட்டக்காராகள் மீது தடியடி நடத்தியதாகவும் இதில் 14 பேர் காயமடைந்ததாகவும் போராட்க்hரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது