ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் விடுத்திருந்த வேண்டுகோள் வேண்டுகோளினையடுத்து நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையிவ் மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் அந்நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும். எனவே இதனைக் கவனத்தில் கொண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றததின்; தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை விதித்து வருவதுடன் உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.