குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமாதானப் பேரவையின் செயற்பாட்டிற்கு நிதியுதவி செய்கின்ற ஜேர்மன் நாட்டின் மிசேறியோர் அமைப்பு பிரதிநிதிகள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் யாழ் மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் மாநகர சபை உறுப்பினர் திருமதி இராகினி உட்பட சர்வமத பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மீள்குடியேற்ற நிலைவரம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக அரசியல் தலைவர்களால் ஜேர்மன் குழுவினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது