வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தையும் அத்தகைய முக்கியத்துவங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விளக்கம் அளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு இன்றைய தினம் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதன்போது, தொல்லியல் முக்கியத்துவம் மிக்க இடங்களை பாதுகாப்பது, கலாசார முக்கியத்துவங்களை பேணுவது, மரபுரிமைகளை அறிதலும் பாதுகாத்தலும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களால் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.