185
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கௌதமி, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 5ஆம் திகதி சென்னையில் காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமிழக முதல்வரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கௌதமி குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற ஜெயலலிதா குறித்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள் இருப்பதாக கௌதமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டது, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், பூரண நலம் பெற்று பின்னர் திடீரென அவர் இறந்தது ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவரை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லையே ஏன்? என்றும் கௌதமி நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடித்தில் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பது குறித்து தமிழக ஊடகங்களில் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. அவரது முகத்தில் காணப்பட்ட துளையின் மூலம் பல நாட்களுக்கு முன்னர் இறந்த அவரது உடல் எம்போமிங் செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே அவசர அவசரமாக அவரது உடல் புதைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
Spread the love