அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் (Brett Kavanaugh) மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்திருந்த நிலையில் அவர் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தனர்.
இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்த போதிலும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.
இதனையடுத்து அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் 51 வாக்குகள் ஆதரவாகவும், 49 வாக்குகள் எதிராகவும் கவனாக்குக்கு கிடைத்ததனையடுத்து அவர் நீதிபதியாக பதவி ஏற்பது சாத்தியமாகும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.