Home இலங்கைமீண்டும் சந்திப்பார்களா? MY3 + MR = இடைக்கால அரசாங்கமா?

மீண்டும் சந்திப்பார்களா? MY3 + MR = இடைக்கால அரசாங்கமா?

by admin


இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் இல்லத்தில்,  மைத்திரி – மஹிந்த ஆகியோர் கடந்த வாரம்  சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையுமானால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை  இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, “நாட்டை விற்பனை செய்தவர்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More